இந்தியாவிலேயே முதல்முறையாக பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் ஆலை
1 min read
Methanol plant for the first time in India from brown coal
16.6.2022
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் ஆலை அமைய உள்ளது.
பழுப்பு நிலக்கரி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரித்துவந்த என்.எல் சி இந்தியா நிறுவனம், பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் திரவத்தை உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், இந்த ஆய்விற்கான ஆய்வறிக்கைக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தலால் தயாரிக்கும் ஆலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
தினமும் 1,200 டன் அளவிற்கும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் அளவிற்கும் மெத்தலாம் தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை, 2027 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் ஆலை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.