July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டு சாணம் ஏற்றுமதி

1 min read

Export of 192 MT of cow dung from India to Kuwait

17.6.2022

குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாட்டுச்சாணம்

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில், இந்தியாவில் இருந்து குவைத்துக்கு 192,000 கிலோ (192 மெட்ரிக்டன்) மாட்டுச் சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சாணம் இயற்கை விவசாயத்திற்காக குவைத்துக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஜெய்ப்பூர் கனகபுரா ரயில் நிலையத்தில் இருந்து முதல் கட்டமாக சாணம் குவைத் புறப்பட்டது. மேலும், சாணம் பொதியிடும் பணி சுங்கத் துறையினரின் மேற்பார்வையில் நடந்து வருவதாகவும் தெரியவருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் இருந்து சாணம் அனுப்பப்படுகிறது. இது குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.