நரபலி கொடுப்பதற்காக வாயில் குங்குமத்தை திணித்ததால் சிறுமி சாவு
1 min read
The girl died after putting saffron in her mouth to sacrifice
17.6.2022
நரபலி கொடுப்பதற்காக வாயில் குங்குமத்தை திணித்ததால் சிறுமி இறந்தாள்
நரபலி
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் புணர்விகாவை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.
மீட்டனர்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெற்றோரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர். இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு புணர்விகா பரிதாபமாக இறந்தார். வாயில் குங்குமம் திணிக்கப்பட்டதால் அவர் மூச்சு திணறி இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.