கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை பீடத்தில் நிறுவப்பட்டது
1 min read
Bharathiyar-Sellammal statue was installed on the pedestal in the shop
20.6.2022
கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை பீடத்தில் நிறுவப்பட்டது.
பாரதியார்-செல்லம்மாள் சிலை
கடையத்தில் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை), பாரதியார்-செல்லம்மாள் திருமண நாளையொட்டி கடையம் நடுத்தெருவில் அமைந்துள்ள நூலக கட்டிடத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை திறப்பு விழா மற்றும் நூலகம் சேவாலயாவின் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் ஆகியவற்றின் திறப்புவிழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சியாக நூலகத்தில் உள்ள மேடையில் இன்று செல்லம்மாள்-பாரதியாரின் சிலை நிறுவப்பட்டது. சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
தெற்கு கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமி நாதன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோபால், கடையம் பாலன், அமர்சேவா சங்க ஆசிரியர் சண்முகம் வேல்முருகன், மற்றும் சேவாலயா கிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.