இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயர் மாற்றம்
1 min read
Rename of Sri Lankan Refugee Camp
20.6.2022
இலங்கை அகதிகள் முகாம் என்று பெயர் மாற்றப்படுவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டலின் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாள், உலக அகதிகள் தினம்எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை-குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.