தமிழகத்தில் இன்று 737 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 737 people in Tamil Nadu today
21.6.2022
தமிழகத்தில் இன்று 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் முககவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4366 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளதால் பல மாவட்ட நிர்வாகங்கள் முககவசம் கட்டாயம் என அறிவித்துள்ளன.