12 வயது மகளை 36 வயது நபருக்கு திருமணம் செய்துவைத்த தாய் கைது
1 min read
Mother arrested for marrying 12-year-old daughter to 36-year-old
22.6.2022
12 வயது மகளை 36 வயது நபருக்கு திருமணம் செய்துவைத்த தாய் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு திருமணம்
உத்தரகாண்ட் மாநிலம் பிதோரொகிரா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை 36 வயது நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற குழந்தைகள் நலத்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த சிறுமி அதேபகுதியை சேர்ந்த 36 வயது நபருக்கு கடந்த சில மாதங்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைது
இந்நிலையில், தனது 12 வயது மகளை 36 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்த சிறுமியின் தாயை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.