June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கடலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி

1 min read

Cuddalore firecracker factory blast kills 3

23.6.2022
கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

இந்நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.