June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணாமலை சந்தித்தார்

1 min read

Edappadi Palanisamy, O. Panneer met Selvam Annamalai

23,6,2922
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர்.

சந்திப்பு

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்றிருந்தனர். ஜனதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமியிடமும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.