அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு
1 min read
Tamilmagan Hussain elected AIADMK leader
23.6.2022
அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
அவைத்தலைவர்
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து கரகோஷம் எழுப்பினர்.
இதையடுத்து பேசிய தமிழ் மகன் உசேன், எம்ஜிஆர் கட்சியை தொடங்கச் சொல்லி கையெழுத்திட்டவர்களில் நானும் ஒருவன். அதிமுகவில் ஏழை தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு சான்று இதுதான் என பேசினார்.