June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 17,070 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 17,070 newcomers in India

1.7.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று 18,819 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 17,070 ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14 ஆயிரத்து 413 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

23 பேர் சாவு

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197,74,71,041 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.