July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

உணவகங்கள் நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

1 min read

Restaurants should not charge service charges to consumers: Consumer court orders

4.7.2022
உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

எந்தஒரு ஓட்டலும், அல்லது உணவகமும் நுகர்வோர்களை சேவை கட்டணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்த முடியாது. சேவை கட்டணம் என்பது தன்னார்வமானது. அவை தனிப்பட்ட விருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

மேலும் உணவுக்கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி.,விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது. மேற்கண்ட நிறுவனங்கள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம். 1915 என்ற எண்ணை அழைத்தோ அல்லது என்சிஎச் என்ற மொபைல் செயலி மூலமாக நுகர்வோர் ஹெல்ப்லைன் மற்றம் நுகர்வோர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறுபபட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.