மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி
1 min read
Admission to M.K. Stalin’s private hospital
14.7.2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றார்.
அங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.