இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20,139 ஆக உயர்வு
1 min read
Daily corona cases in India rise to 20,139
14.7.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 20 ஆயிரத்து 139 பேராக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,69,850 லிருந்து 4,36,89,989 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 16,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,11,874 லிருந்து 4,30,28,356 ஆக உயர்ந்துள்ளது.
38 பேர் சாவு
மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 38 பேர் பலியாகினர். இதுவரை 5,25,557 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,32,457 லிருந்து 1,36,076 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 199.27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 13,44,714 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.