நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை
1 min read
Ban on holding protests in Parliament premises
15.7.2022
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
தடை
அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக மாநிலங்கலவை செயலாளர் பி.சி.மோடி கூறியுள்ளார். போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என மாநிலங்களவை எம்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.