10-ம் வகுப்பு மட்டுமே படித்து 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது
1 min read
A fake doctor who studied only 10th standard and ran the hospital for 15 years was arrested
16.7.2022
ஊத்துக்கோட்டையில் 10-ம் வகுப்பு வரை படித்து 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
போலி டாக்டர்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஒருவர் மாறன். இவர் இன்று ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சுபல்குமார் மாண்டல்(வயது 41) என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்தது தெரியவந்து.
இதுகுறித்து டாக்டர் மாறன் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போலி டாக்டர் சுபல்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சபல்குமார் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஊத்துக்கோட்டையில் 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.