June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,223 பேருக்கு கொரோனா

1 min read

2,223 people in Tamil Nadu have corona today

19.7.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்து இன்று (ஜூலை 18 ம் தேதி) ஒரே நாளில் 2,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் இன்று (ஜூலை 18) 33,312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் 2,223 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,20,000 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,65,064 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கோவிட்டுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. பலியானோர் எண்ணிக்கை 38,030 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டது. நேற்று (ஜூலை 17 ம் தேதி ) 596 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 18 ம் தேதி) சென்னையில் 575 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,906 ஆக உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.