July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 21,880 பேருக்கு கொரோனா- 60 பேர் பலி

1 min read

21,880 new cases of corona in India- 60 people died

22.7.2022
இந்தியாவில் புதிதாக 21 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உ்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த புதன் கிழமை பாதிப்பான 20 ஆயிரத்து 557 மற்றும் நேற்றைய பாதிப்பான 21 ஆயிரத்து 566-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 47 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 21 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

60 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 201 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 819 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.