நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது- சூரரை போற்று படம் 5 விருதை பெற்றது
1 min read
National award for actor Surya- The film won 5 awards in praise of Surara
22.7.2022
நடிகர் சூர்யா சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றார். சூரரைப்போற்று- 5 மண்டேலா-2 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- 3 என மொத்தம் 10 விருதுகளை தமிழ் சினிமா குவித்தது.
நடிகா சூர்யா
சூரைப் போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , சிறந்த நடிகைக்காக தேசிய விருது அபர்ணா பால முரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகியப் பிரிவுகளிலும் சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடோனா அஸ்வி்ன்
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு
சிறந்த நடிகர்- சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யா தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் (இந்தி); நடிகர்: அஜய் தேவ்கான் சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) கதை வசன எழுத்தாளர்: ஷாலினி உஷா நாயர் & சுதாகொங்கரா ; மண்டேலா (தமிழ்); வசனகர்த்தா: மடோன் அஷ்வின் சிறந்த துணை நடிகை சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (தமிழ்); நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி சிறந்த இயக்குநர்; ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு – ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்) சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம் சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி சிறந்த கன்னட படம்: டோலு சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர் சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக் சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ்