ஆசிரியர் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் மந்திரி – உதவியாளர் கைது
1 min read
Minister-Assistant Arrested in Teacher Appointment Irregularity Case
23.7.2022
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்குவங்காள கல்வி மந்திரி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முறைகேடு
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. இவர் கல்வி மந்திரியாக இருந்தார். சோதனையின் போது மந்திரியின் நெருங்கிய உதவியாளரிடமிருந்து ரூ.20 கோடி கைபற்றப்பட்டது இந்த நிலையில் மந்திரி கைது செய்யப்பட்டு உள்ளார். நேற்று இரவு முழுவது மந்த்திரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். நேற்று இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் உள்ள அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் இருந்து அமலாக்கத்துறை ரூ.21 கோடி ரூபாயை கைபற்றியது. அர்பிதா மாநில மொபைல்களும் கைபற்றபட்டன.அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.