மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
1 min read
President Ram Nath Kovind Tributes at Mahatma Gandhi Memorial
24.7.2022
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. அதில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாளை பதவியேற்பு
இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை(திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் வெளியேறுகிறார்.
இந்நிலையில், பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.