தோரணலையில் சீர்காழி சிவ.சிதம்பரத்தின் இன்னிசை நிகழ்ச்சி
1 min read
Sirkazhi Siva Chidambaram’s Innisai program at Thoranalai
3.8.2022
தோரணமலையில் சீர்காழி சிவ.சிதம்பரத்தின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தோரணலை படிக்கட்டுகள்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி அடிவாரத்தில் இருந்து மலைக்கு அகலமான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டன. ஆவுடையானூரைச் சேர்ந்த எலும்பு முறிவு டாக்டர் தர்மராஜ் அவர்கள் குடும்பத்தார் இந்த படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தனர். மேலும் மலைப்பாதையில் 6 இடங்களில் அழகுற மண்டபங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் திறப்பு விழா கடந்த ஆண்ட ஆடிப் பெருக்கு அன்று நடந்தது. அதன் ஓராண்டு தினத்தை இன்று ஆடிப்பெருக்கு அன்று கொண்டாடப்பட்டது.
காலையில் விநாயகர் மற்றும் மலை மீதுள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
பிரபல பின்னணி பாடகர் சீாகாழி சிவ.சிதம்பரம் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் முன்னிலையில் டாக்டர் தர்மராஜ் மாலை அணிவித்தார். மற்ற கலைஞர்களுக்கு டாக்டர் இளங்கோ பொன்னாடை அணிவித்தார்.
விழாவையொட்டி காலை முதல் மாலை வரை உணவு வழங்கப்பட்டது.