புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் தாக்குதலில் அப்பாவி தொழிலாளி சாவு
1 min read
Innocent laborer killed in terrorist attack in Pulwama area
5.8.2022
புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கவர்னர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மிர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். நேற்று இரவு நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் பலியான தொழிலாளி முகம்மது மும்தாஜ் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் புல்வாமா பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில், இந்த திடீர் தாக்குதலில் சிக்கிக்கொண்டனர்.
அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் உள்ளது என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித அவர், இந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் இந்த கொடூர தாக்குதலில் பலியான தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.