முல்லை பெரியாறு அணை விவகாரம் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்
1 min read
Pinarayi Vijayan’s letter to M.K.Stalin on Mullai Periyar dam issue
5.7.2022
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்
கடிதம்
முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது ;
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.