சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்
1 min read
Special officers have been appointed in all 234 constituencies for uniform distribution of electricity
5.8.2022
சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரம் விழுந்து மின் வயர்கள் அறுபட்டுள்ளதால், 150 மின்மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் மரங்கள் அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சீரான மின்சாரம் விநியோகம் செய்வதற்காக, முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி ஒரு தொகுதிக்கு ஒரு அதிகாரி என்ற அடிப்படையில் 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுள்ளனர். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.