சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக கலைச்செல்வி நியமனம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
1 min read
Kalachelvi’s appointment as CSIR Director General: Greetings from M.K.Stal
7.8.2022
சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட மூத்த விஞ்ஞானி கலைச்செல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலைச்செல்வி
சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட மூத்த விஞ்ஞானி கலைச்செல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர் இந்தியாவின் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்!
தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.