இந்தியாவில் புதிதாக 16,047 பேருக்கு கொரோனா
1 min read
16,047 new cases of corona in India
10.8.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்தது. ஒரே நாளில் 16,047 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. இந்தநிலையில் இன்று காலைவரை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 16 ஆயிரத்து 047 ஆக அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை 16,167 செவ்வாய்க்கிழமை 12,751 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,047 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19,539 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,35,610 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,31,807 லிருந்து 1,28,261 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக பதிவானது.
54 பேர் சாவு
இந்தநிலையில் 2-வது நாளாக இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 8226 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,03,71,204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.