2.52 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளனர்
1 min read
2.52 lakh people have linked voter ID card with Aadhaar number
10.8.2022
நாடு முழுவதும் 2.52 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆதார் எண்
நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், கடந்த 1 முதல் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், நாடு முழுவதும் 2.52 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜஸ்தானில் மட்டும் 55.86 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனை செய்வதற்காக கடந்த 9 ம் தேதி மட்டும் 12. 24 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.