நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு
1 min read
9 Nagapatnam fishermen captured by Sri Lankan Navy
10.8.2022
முல்லைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செயுள்ளனர்.
மீனவர்கள்
நாகப்படினம் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியான முல்லை தீவு அருகே மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துளள்னர். அந்த மீனவர்களை விசரணைக்காக திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்தாக வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தி ஆஜர்படுத்த உள்ளனர். இந்த சம்பவம் நாகை மீனவர்களிடையே கொந்தளிப்பையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.