நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லி போலீசுக்கு மாற்றம்
1 min read
All cases against Nubur Sharma transferred to Delhi Police
10.8.2022
: சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக புகார் கூறப்பட்ட நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசாரிடம் மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.
நுபுர் சர்மா
பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. டெலிவிஷன் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் சிவலிங்கம் பற்றி பேசியதற்கு நுபுர் சர்மா இப்படி பேசியதாக கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர்
இதனையடுத்து நுபுர் சர்மா மீது பா.ஜ., மேலிடம் கட்சி நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்தது. நுபுர் சர்மாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.
டெல்லிக்கு…
தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுவை கடந்த ஜூலை 1-ம் தேதி நிராகரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில் தனக்கு பல்வேறு தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால்,என் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தார். இன்று நடந்த விசாரணையில், நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.