July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி

1 min read

Corbevax booster vaccine for everyone over 18 years of age

10.8.2022
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

தடுப்பூசி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பெயரிலான தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றனர். கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஒப்புதல்

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால், கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு முதன்மை தடுப்பூசிகளில் எதனை முதலில் போட்டு கொண்டிருந்தாலும், அதற்கு பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பெருமை

இதுபற்றி பயாலஜிக்கல்-இ நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை 2 டோஸ்களாக எடுத்து கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்ட நாட்டின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை கோர்பேவாக்ஸ் பெறுகிறது என தெரிவித்து உள்ளது.

ஒரு தேர்ந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு தேவையான, எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த மேம்படுத்துதலை கொண்டிருப்பது மற்றும் திறமையான பாதுகாப்பு வழங்குவது ஆகியவற்றை இந்த கோர்பேவாக்ஸ் கொண்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.