ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு-பிரியங்காவுக்கு கொரோனா
1 min read
Former Congress president Rahul Gandhi is ill; Priyanka affected by corona
10.8.2022
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ராஜஸ்தான் வருகையை ரத்து செய்துள்ளார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஆல்வார் நகருக்கு இன்று வருகை தர திட்டமிட்டு இருந்தார். அவர் கட்சியின் நேத்ராத்வ சங்கல்ப சிவிர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது ராஜஸ்தான் வருகையை அவர் ரத்து செய்து விட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பிரியங்காவுக்கு கொரோனா
ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.