தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை- முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை
1 min read
Increasing sale of drugs in Tamil Nadu- Chief Minister M. K. Stalin is worried
10.8.2022
போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-
வேதனை
கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்படுபவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க, நம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகிவிடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை; போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்