வேலைவாய்ப்பு தேர்வில் ஒரே நேரத்தில் அம்மாவும், மகனும் தேர்ச்சி
1 min read
Mother and son pass the employment test at the same time
10.8.2022
கேரளாவில், அரசு தேர்வாணையத்தின் கீழ் தேர்வெழுதி அம்மா மகன் இருவருமே ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்-மகன்
கேரளாவில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் அம்மா மற்றும் மகன் இருவருமே ஒரே நேரத்தில் தேர்வெழுதி பாஸ் ஆகி, இருவருக்குமே அரசு வேலை கிடைத்துள்ளது.
கேரள, மலப்புரத்தை சேர்ந்த, பிந்து எனும் 42வயது அம்மாவும், விவேக் எனும் அவரது 24 வயது மகனும் ஒரே நேரத்தில் அரசு தேர்வாணையத்தில் தேர்வெழுதி உள்ளனர். விவேக், எல்டிசி பிரிவில், லோயர் டிவிஷனல் கிளார்க் வேலைக்கான தேர்வில், தேர்வெழுதி, 38வது ரேங்கிலும், பிந்து , எல்ஜிஎஸ் பிரிவில் லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் தேர்வில் 92 ரேங்கிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
“நானும் அம்மாவும், ஒன்றாக படித்தோம், ஆனால், இருவருமே ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என்று நினைத்ததில்லை” என்று பிந்துவின் மகன் விவேக் கூறினார்.
விவேக் தனது தயாரிப்புகளைப் பற்றி மேலும் கூறுகையில், “நானும் அம்மாவும் பயிற்சி வகுப்புகளுக்கு ஒன்றாகச் சென்றோம். என் அம்மா என்னை இதற்கு அழைத்து வந்தார், அப்பா எங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆசிரியர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தோம் ஆனால் ஒன்றாக தகுதி பெறுவோம் என்று நினைத்ததில்லை. நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.” என்றாா
பிந்துவிற்கு இது வெற்றிகள் மற்றும் தோல்விகள் நிறைந்த பயணம். எல்ஜிஎஸ் தேர்வுக்கு இரண்டு முயற்சிகளும், எல்டிசி தேர்வுக்கு ஒரு முயற்சியும் எடுத்துள்ளார். இறுதியில், அவர் தனது நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றார். அங்கன்வாடி மைய ஆசிரியையான திருமதி பிந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியப்பணியில் இருந்து வருகிறார்.