செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு
1 min read
The Prime Minister praised the Tamil Nadu Government for conducting the Chess Olympiad well
10.8.2022
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
பாராட்டு
செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என பிரதமர் தனது சமூக வலை தள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசும் தமிழக மக்களும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.