காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருது
1 min read
Congress MP Sasi Tharoor awarded France’s highest citizen award
11/8/2022
சசி தரூரின் எழுத்துக்கள் மற்றும் உரைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது
பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு வழங்கி அந்நாட்டு அரசாங்கம் கவுரவித்துள்ளது. பிரான்சின் உயரிய விருதான, செவாலியே விருது (Chevalier de la Legion d’Honneur) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய எழுத்துக்கள் மற்றும் அவர் ஆற்றிய உரைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சசி தரூருக்கு ஏற்கனவே இதே போன்றதொரு உயரிய விருதை ஸ்பெயின் நாடும் வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில், ஸ்பெயின் மன்னர் சசிதரூருக்கு “என்கோமியெண்டா டி லா ரியல் ஆர்டர் எஸ்பனோலா டி கார்லோஸ் III” விருதை வழங்கினார்.23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தூதரக பணியாற்றியுள்ள சசி தரூர் பல புனைகதை புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.