இலவசம் பற்றி வாக்குறுதிகள் விவாதிக்க குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
1 min read
Supreme Court advises to set up committee to discuss promises about free
11.8.2022
அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இலவச பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பணஇழப்பு ஏற்படும் இந்த தருணத்தில் ஒரு தீவிர விவகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. மேலும் இதுபற்றி குழு முன் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இலவச பொருள் வாக்குறுதி
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின்போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பண இழப்பு
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் விசாரணைக்கு இன்று வந்தது. அவர் பேசும்போது, இது ஒரு விவகாரம் இல்லை என ஒருவரும் கூறவில்லை. இது ஒரு தீவிர விவகாரம். அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இலவச பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பணஇழப்பு ஏற்படும் இந்த தருணத்தில் ஒரு தீவிர விவகாரம் ஆக கொள்ளப்படுகிறது என கூறினார்.
எனினும், நல திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி கூறியுது. ஆனால், பொருளாதாரத்தில் பணஇழப்பு ஏற்படுகிறது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மக்களின் நலன்களில் சமநிலை பேணப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. பலன் பெறுகிறவர்கள் அது வேண்டும் என விரும்புகின்றனர். எங்களுடையது வளமிக்க மாநிலம் என கூறுகின்றனர்.
குழு முன் விசாரணை
ஆனால் சிலர், நாங்கள் வரி செலுத்துகிறோம். பணம் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். அதனால், இரு தரப்பினரின் விசயங்களும், ஒரு குழுவின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என கோர்ட்டு கூறியதுடன் இந்த வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது.