டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை
1 min read
An image created during an investigation into an outbreak of monkeypox, which took place in the Democratic Republic of the Congo (DRC), 1996 to 1997, shows the hands of a patient with a rash due to monkeypox, in this undated image obtained by Reuters on May 18, 2022. CDC/Brian W.J. Mahy/Handout via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY.
One more person has monkey measles in Delhi
13.8.2022
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
குரங்கு அம்மை
டெல்லியில் குரங்கு அம்மை பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் நைஜிரியா சென்று வந்துள்ளர்.
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் குரங்கு அம்மை பாதித்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.