சுதந்திரதினத்தன்று தாக்குதல் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் கைது
1 min read
Terrorists who planned to attack on Independence Day arrested
14.8.2022
சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திர தினம்
இந்தியாவின் 75வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் போலீசார் இணைந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சோதனையின்போது 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 3 கையெறி குண்டுகள், 1 ஐஇடி குண்டு, துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளில் திட்டம் முறியடிக்கப்பட்டது.