“தமிழகம் குட்டி இலங்கையாக மாறுகிறது” – அண்ணாமலை பேட்டி
1 min read
” Tamil is turning into a little Sri Lanka” – BJP leader Annamalai
18.8.2022
இலவசங்கள் கொடுத்ததால் வளர்ச்சி என்பதை திமுக நிரூபிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மது விற்பனையை நம்பி ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இலவசங்கள் கொடுத்ததால் வளர்ச்சி என்பதை திமுக நிரூபிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், எங்களைத் துன்புறுத்தலாம். உங்கள் அடக்குமுறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின். தமிழகம் குட்டி இலங்கையாக மாறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.