சிறையில் இருந்த காதலனுக்கு முத்தம் மூலம் போதைப்பொருள் ஊட்டிய பெண்; திருட்டு பாசம் உயிரை பறித்தது
1 min read
Woman who drugged jailed boyfriend with a kiss; Stealing affection took life
19.8.2022
சிறையில் இருந்த காதலனை பார்க்க காதலி சென்றார்.அவருக்கு முத்தம் மூலம் போதைப்பொருள் ஊட்டியபோது காதலன் இறந்தார்.
சிறையி்ல் காதலன்
இந்த விபரீத சம்பவம் அமெரிக்காவின் டென்னசியில் நடந்துள்ளது. ஜோசுவா பிரவுன் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு 2029 வரை தண்டனை விதிக்கப்பட்டது.
போதை பொருள் பழக்கத்தால் அவர் சிறையில் போதைபொருள் கிடைக்காமல் திண்டாடினார். இதனை தன்னை பார்க்கவந்த காதலி ரேச்சல் டொலார்ட்டிடம் கூறி உள்ளார்.
முத்தம் மூலம் போதைப்பொருள்
இந்த நிலையில் மறுமுறை காதல் ரேச்சல் டொலார்ட் காதலனை பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்து உள்ளார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து பலியானார். போதைப்பொருள் கிடைக்காமல் சிறையில் தவித்த காதலைனை பார்க்க சென்ற காதலி வாயில் போதைப்பொருள் வைத்திருந்தார். முத்தமிடுவது போன்ற சாக்குப்போக்கில் அவர் வாயில் இருந்து போதை மருந்துகளை காதலன் வாயில் போட திட்டம் தீட்டி இருந்தார்.
ஆனால் போதைப்பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் காதலன் 14 கிராம் போதைப்பொருளை மொத்தமாக விழுங்கியுள்ளார். அதுவே விஷமாகிவிட்டது.
அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது இந்த விஷயம் தெரியவந்தது. அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் காதலியை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.