தமிழகத்தில் இன்று 591 பேருக்கு கொரோனா
1 min read
591 people have corona in Tamil Nadu today
22.8.2022
தமிழகத்தில் இன்று 591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் போன்றவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 603ஐ விட குறைவாகும்.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 63 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 696 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 என்ற அளவில் உள்ளது.