இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 9,531 பேராக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 9,531
22.8.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 9,531 பேராக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 19-ந்தேதி பாதிப்பு 15,754 ஆக இருந்தது. மறுநாள் 20-ந் தேதி 13,272 ஆகவும், 21ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) 11,539 ஆகவும் குறைந்தது
இந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சரிந்துள்ளது. இந்தியாவில் இன்று 9,531 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
36 பேர் சாவு
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,27,368 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 11,726 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 97,648 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது முந்தைய நாளை விட 2,231 குறைவு ஆகும்.