July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த தலிபான் தலைவர்

1 min read

Taliban leader who raped a young woman and forced her into marriage

2.9.2022
தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டாய திருமணம்

தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டி, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் (என்டிஎஸ்) மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்துள்ளார், இது குறித்து அவரது மனைவி எலாஹா (24) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், காபூல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்துவந்த எலாஹா, சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் தலிபான் புலனாய்வுத் தலைமையகத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியது.
எலாஹா ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளின் படங்களைத் தனது தொலைபேசியில் வைத்திருந்ததால், தலிபான் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அவர் அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார், வீடியோ எடுக்கப்பட்டார். எலாஹா தலிபான் தலைவர் சயீத் கோஸ்டி தினமும் என்னை சித்ரவதை செய்து வந்தார். இரவில் என்னை பலாத்காரம் செய்தார்.

என்னை கொன்றுவிடுவார்

இவை என் கடைசி வார்த்தைகளாக இருக்கலாம். ஏனென்றால், அவர் என்னைக் கொன்றுவிடுவார். ஒவ்வொரு நாளும் சித்திரவதைகளை அனுபவித்து இறப்பதை விட ஒரு முறை இறப்பது சிறந்தது என்று எலாஹா கூறினார்.
எலாஹா தவிர்க்க முடியாமல் சயீத் கோஸ்டியை தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காபூலில் உள்ள குல்பஹர் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் பலமுறை தப்பிக்க முயற்சித்த போதிலும், அவரால் முடியவில்லை. இறுதியாக ஒரு ஸ்மார்ட் போனைப் பெற்று தனது வீடியோவைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வீடியோவில் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.