அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்
1 min read
Tamil Nadu is 3rd among the states with the highest number of passport holders
4.9.2022
இந்தியாவில் அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.
பாஸ்போர்ட்டு
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு நாம் செல்ல பாஸ்போர்ட் பெற வேண்டியது கட்டயாம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் நாம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கூட செல்ல முடியாது. இந்தியாவில் மூன்று வகையான பாஸ்போர்ட் உள்ளது. அதாவது சாதாரண-வழக்கமான பாஸ்போர்ட்டு, டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டு மற்றும் அஃபீஷியல் பாஸ்போர்ட்டு என்று மூன்று வகை பாஸ்போர்ட்கள் உள்ளன.
ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதிலும் அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வரை 7,95,19,121 பேர் பாஸ்போர்ட்டு வைத்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கேரளாவில் 91,43,099 பேரும், மராட்டியத்தில் 89,32,053 பேரும், தமிழ்நாட்டில் 79,27,869 பேரும் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைவான நபர்கள்தான் பாஸ்போர்ட்டு வைத்துள்ளனர்.