தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா
1 min read
Today 434 people have corona in Tamil Nadu
10.9.2022
தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 247 ஆண்கள், 187 பெண்கள் என மொத்தம் 434 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், கோவையில் 59 பேர், செங்கல்பட்டில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. ஆஸ்பத்திரியில் 381 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 185 பேரும், கோவையில் 488 பேரும், செங்கல்பட்டில் 269 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.