அழகிய கேரள மாநிலத்திற்குள் நாம் நுழைகிறோம்-ராகுல் காந்தி நெகிழ்ச்சி டுவீட்
1 min read
We are entering the beautiful state of Kerala-Rahul Gandhi Eleschi Tweet
10.9.2022
அழகிய கேரள மாநிலத்திற்குள் நாம் நுழைகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி இன்று கேரள எல்லையில் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அழகிய கேரள மாநிலத்திற்குள் நாம் நுழைகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கல்வி மூலம் சுதந்திரம் பெற, அமைப்பின் மூலம் வலிமை பெற, தொழில் மூலம் வளம் பெறலாம். இன்று, அழகிய கேரள மாநிலத்திற்குள் நாம் நுழையும் போது, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு, அவருடைய வார்த்தைகள் நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டள்ளது.