ராகுல் காந்தி 5-வது நாளாக பாதயாத்திரை
1 min read
Rahul Gandhi Padayatra for 5th day
11.9.2022
தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். இன்று கேரளாவில் 5-வது நாள் பாதயாத்திரை மேற்கொண்டார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி இன்று முன்தினம் குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 5வது நாளான இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.