June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

Periyar Thital, Headquarter of Social Justice for All India – Speech by Chief Minister M. K. Stalin

17.9.2022
தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா நேறறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்குமுதல் அமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெரியார் திடலில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சிறுகனூரில் 30 ஏக்கர் பரப்பளவில், நூலகம், ஆய்வகங்களுடன் ‘பெரியார் உலகம்’ அமைக்கப்படுகிறது. பெரியார் உலகில் 95 அடி உயர பெரியார் சிலை நிறுவப்பட உள்ளது.
பின்னர் பேசிய முதல் அமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறியதாவது;-

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல்.பெரியார் திடல் எனது தாய் வீடு :பெரியார் திடல் வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன். தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.