June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

1 min read

Extension of time to apply for veterinary courses

24.9.2022
கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

நீட்டிப்பு

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி, கிளி மூக்கு வால் போன்ற நாட்டு கோழிகள் இடம் பெற்றன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘ 4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 3-ந்தேதி என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்தார். கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நாளை மறுதினத்துடன்(26-ந்தேதி) முடிவடைந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.95 கோடியாக உயர்வு
வாஷிங்டன், செப்.25-
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.95 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 56 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 959 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 38 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.